Trending News

“சைத் சிட்டி” வீடமைப்புத்திட்டம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் மக்களிடம் கையளிப்பு….

(UTV|COLOMBO)-மன்னார் மாவட்டத்தின் உப்புக்குள கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் கற்பிட்டியில் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் உப்புக்குள மக்களின் மீள்குடியேற்றத்திற்கென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளை ஏற்று ஐக்கிய அரபு அமீரகத்தின்  UAE AID – Emirates Red Crescent தொண்டு நிறுவனத்தினூடாக நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்புத் தொகுதி இன்று (11) ஐக்கிய அரபு அமீரக தனவந்தர்கள் மற்றும் தொண்டு நிறவனத்தின் உயரதிகாரிகள் பங்கேற்புடன்  திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.

“ஷெய்ஹ் சைத் சிட்டி” என்று பெயரிடப்பட்டுள்ள இவ்வீட்டுத்திட்டத்தில் சுமார் 120 வீடுகள், கடைத்தொகுதி, மாநாட்டு மண்டபம் ஆகியவை நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், மன்னார், முசலி, மாந்தை மேற்கு பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

 

 

 

Related posts

Khayyam: Music maestro of classical allure

Mohamed Dilsad

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக குழு உறுப்பினர் காயம்

Mohamed Dilsad

Hemasiri and Pujith further remanded

Mohamed Dilsad

Leave a Comment