Trending News

இந்திய மீனவரின் சடலம் கண்டுபிடிப்பு

(UTV|COLOMBO)-இலங்கையின் கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான இந்திய மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பணிகளை இலங்கை கடற்படை முன்னெடுத்து வருகிறது.

இதுவரை எட்டு இந்திய பிரஜைகள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முதலுதவி உட்பட ஏனைய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மீனவ பரிசோதனை காரியாலத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படை தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதுதொடர்பாக கடற்படை தெரிவித்துள்ளதாவது: இந்திய மீனவர் ஒருவரின் சடலம் ஒன்று கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்திய மீனவர் ஒருவரின் சடலம் ஒன்று நேற்று (13) நெடுந்தீவு கடல் பகுதியில் கடற்படையினர்கள் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவர் இந்தியாவில், ராமநாதபுரம் பகுதியில் வசிக்கும் 55 வயதான கருப்பய்யா முன்னசாமி என்று உறுதிசெய்யப்பட்டது.

இப்போது இறந்த மீனவரின் உடலை உடனடியாக தரையிக்கு கொண்டுவந்து யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் கடற்படையினர்கள் மேற்கொள்கின்றனர்.

குறித்த தேடும் நடவடிக்கைகளின் போது மேலும் 8 இந்திய மீனவர்களை கடற்படையினர்களினால் மீட்கபட்டுள்ளதுடன் மீட்கபட்ட மீனவர்களுக்கு அடிப்படை சிகிச்சை வழங்கப்பட்ட பின் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (12) இரவு இலங்கை கடல் எல்லை மீறி சுமார் 500 இந்திய மீன்பிடி படகுகள் நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவது இலங்கை கடற்படையினரினால் கண்கானிக்கப்பட்டது. அங்கு 2 படகுகள் மற்றும் 9 மீனவர்களும் இலங்கை கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

அத்தகைய எல்லை மீறி இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க வரும் இந்திய மீன்பிடி படகுகளினால் இப் பகுதி இலங்கை மீனவர்களின் வலைகள் மற்றும் பல மீன்பிடி உபகரனங்கள் சேதமடைந்ததை காணப்படுகிறது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

Related posts

Bank of Ceylon Scores Its Record Breaking Third “Trillion”

Mohamed Dilsad

Sri Lanka formally becomes State party to mine ban convention

Mohamed Dilsad

AmeriCares to deploy disaster response experts to Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment