Trending News

இன்றிலுருந்து காற்றின் வேகம் அதிகரிக்கலாம்

(UTV|COLOMBO)-இன்று இரவிலிருந்து நாடு முழுவதும் (குறிப்பாக கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும்) சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்று நிலைமை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

 

 

 

 

Related posts

GMOA to go on strike from Monday – [VIDEO]

Mohamed Dilsad

ஹெரோயினுடன் நபரொருவர் கைது…

Mohamed Dilsad

மின்சக்தி அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

Mohamed Dilsad

Leave a Comment