Trending News

துறைமுக நகர நிர்மாணப்பணிகள் நிறைவு

(UTV|COLOMBO)-கொழும்பு துறைமுக நகர நிர்மாணத்திற்காக கடலை ஆழப்படுத்தும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகின்றது.

கொழும்பு துறைமுக நகரம் 269 ஹெக்டேயர் பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் அடுத்தகட்டமாக கொழும்பு துறைமுக நகரின் நிர்மாணம் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரின் தலைமையில் துறைமுக நகரின் நிர்மாண நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதிநவீன வசதிகளுடன் கூடிய வகையில் கொழும்பு துறைமுக நகரம் நிர்மாணிக்கப்படுவதுடன், கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பை இணைக்கும் வகையிலான அதிவேக வீதியும் நிர்மாணிக்கப்படவுள்ளது.

 

 

 

 

Related posts

பொலிஸ் OIC க்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டு சிக்கிக் கொண்ட நபர்

Mohamed Dilsad

ஜம்மு காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதிதான் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Mohamed Dilsad

Two trains decommissioned due to less commuters

Mohamed Dilsad

Leave a Comment