Trending News

நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் தெரேசா மே வெற்றி

பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்துள்ள நிலையில், பிரெக்ஸிட் நடவடிக்​கையை முன்னெடுப்பதற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்காக தம்முடன் இணைந்து பணியாற்ற வருமாறு அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரதமர் தெரேசா மேயினால் கொண்டுவரப்பட்ட பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் தோல்வியடைந்த நிலையில், தெரேசா மேயின் 2 வருட கால ஆட்சி தோல்வியடைந்துவிட்டதாகத் தெரிவித்து எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பைன், தெரேசா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திருந்தார்.

இந்நிலையில், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தில் விவாதமும் வாக்கெடுப்பும் நேற்று நடைபெற்றது.

வாக்கெடுப்பின் நிறைவில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரதமர் தெரேசா மேயிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 306 பேரும் எதிராக 325 பேரும் வாக்களித்திருந்தனர்.

இதனையடுத்து, பிரெக்ஸிட் நடவடிக்கையை முன்னெடுக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து பணியாற்ற வேண்டுமென தெரேசா மே அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து மார்ச் மாதம் 29 ஆம் திகதி, பிரித்தானியா விலகுவது தொடர்பிலான தீர்மானமிக்க இறுதி வாக்கெடுப்பு அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் நடாத்தப்பட்டது.

இதன்போது, 432 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒப்பந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 202 வாக்குகளும் எதிராக 230 வாக்குகளும் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

මංගලගේ පොතට මර්වින්ගෙන් අවවාදයක්

Mohamed Dilsad

Ranil sworn in as Prime Minister

Mohamed Dilsad

தேசிய பாதுகாப்பு நிதியம் – திருத்த சட்டமூலம் பராளுமன்றத்திற்கு

Mohamed Dilsad

Leave a Comment