(UTV|COLOMBO)-இரட்டை பிரஜாவுரிமையை அங்கீகரிக்காத நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்காக நிரந்தர வதிவிட விசாவை வழங்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்திருப்பதாக . திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்களில் ஒருவரான சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இத்தகைய இலங்கையர்களின் அறிவையும் ஆற்றல்களையும் நாட்டின் அபிவிருத்தியில் இணைத்துக் கொள்வது திட்டத்தின் நோக்கம். இத்தகைய நிரந்தர வதிவிட வீசாவை பெற்றுக்கொள்வதன் மூலம் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் பல உரிமைகளை துய்க்க முடியும். இலங்கையில் முதலீடு செய்தல், காணிகளை கூலிக்கு பெற்றுக்கொள்ளுதல் போன்ற அனுகூலங்கள் முக்கியமானவை என திரு.ஹெட்டியாராச்சி கூறினார்.
இலங்கையில் இரட்டை பிரஜாவுரிமை கோரிய மேலும் ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளது. மேலும் ஐயாயிரம் பேர் இரட்டை பிரஜாவுரிமைக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.