Trending News

கொட்டாஞ்சேனையில் வீதி ஒன்றுக்கு பூட்டு

(UTV|COLOMBO)-கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கே. சிறில் பெரேரா மாவத்தை வீதி இன்று முதல் இரவு 10 மணியில் இருந்து 05 மணித்தியாலங்களுக்கு மூடப்பட உள்ளது.

அந்த வீதி மீண்டும் 21ம் திகதி அதிகாலை 05 மணிக்கு வழமைக்கு திரும்பவுள்ளது.

நீர்க்குழாய் பொருத்தும் பணி காரணமாக வாசல சந்தியில் இருந்து வோல்ஸ் லேன் சந்தி வரையான வீதியில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை அந்த வீதி ஜனவரி 25ம் திகதி முதல் பெப்ரவரி 08ம் திகதி வரையில் இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 05 மணி வரை மூடப்படும் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 

Related posts

மண் மேடு சரிந்து ஒருவர் பலி

Mohamed Dilsad

SAITM CEO gone overseas without notifying Police

Mohamed Dilsad

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை

Mohamed Dilsad

Leave a Comment