Trending News

இன்று(21) முதல் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சீருடை

(UTV|COLOMBO)-முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு இன்று முதல் உத்தியோகபூர்வ சீருடை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் சிசிர கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.

சில முச்சக்கர வண்டி சாரதிகள், நாகரிகமான முறையில் உடைகளை அணிந்து பயணிப்பதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2 வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட செயலமர்வுகளில், தமக்கான சீருடையொன்றை வழங்குமாறு முச்சக்கர வண்டி சாரதிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தேசிய வீதி பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த நடவடிக்கைக்கு சில முச்சக்கர வண்டி சாரதிகள் எதிர்ப்பு வௌியிட்டுள்ளனர்.

 

 

 

Related posts

Rail Trade Union deny charges of damaging property

Mohamed Dilsad

Weather today

Mohamed Dilsad

Sri Lanka awarded win after FIFA sanctions Macau

Mohamed Dilsad

Leave a Comment