Trending News

பொலிஸ் திணைக்களம் தொடர்பில் ஜனாதிபதி

(UTV|COLOMBO)-பொலிஸ் திணைக்களமானது, கல்விமான்களைக் கொண்ட தொழில்சார் நிபுணத்துவம் அடைந்த சேவை நிலையமாக வேண்டும் எனவும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தேசிய பொலிஸ் கற்கை நிலையத்தை, பட்டம் வழங்கும் தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்பதுடன், அதற்கான தடைகளை நீக்கவும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தேசிய பொலிஸ் கற்கை நிலையத்தின் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தினைப் பலப்படுத்துவதற்கும் அதன் சேவைகளை உயர்தரத்தில் வழங்குவதற்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய பல செயற்பாடுகள் கடந்த காலத்தில் தவறவிடபட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் பொலிஸ் திணைக்களத்தினை பொறுப்பேற்று 2 மாதங்களேயான நிலையில், திணைக்களத்தினை பலப்படுத்துவதற்கான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது ஆலோசனைக்கமைய புதிய சட்ட திட்டங்களை உருவாக்கும் நடவடிக்கைகள் சட்டமா அதிபரினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உயிர்த் தியாகங்களை மேற்கொண்டு நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்கான தமது பொறுப்புகளை நிறைவேற்றும் பொலிஸாருக்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய உயர் கௌரவத்தை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் சாதகமற்ற நிலையை எதிர்கொள்ள நேரிட்ட போதிலும், நாட்டுக்காகவும் மக்களுக்காகவும்
மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்களை மேற்கொள்ள தாம் ஒருபோதும் பின்னிற்பதில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

 

Related posts

பொலித்தீன் தயாரிப்பு தொழிற்சாலை முற்றுகை

Mohamed Dilsad

Three arrested with ‘Ice’

Mohamed Dilsad

ஜனாதிபதி – சபாநாயகர் இடையிலான சந்திப்பு நிறைவு…

Mohamed Dilsad

Leave a Comment