Trending News

71 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் விசேட அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி

(UTV|COLOMBO)-எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தினம் கொண்டாடப்படவுள்ளது.

இதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்நாட்டவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

சுதந்திர தினக் கொண்டாட்டம் காலி முகத்திடலில் இடம்பெறும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார். மாலைதீவு ஜனாதிபதியும் அவரது பாரியாரும் விசேட அதிதிகளாகப் பங்கேற்பார்கள் என அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்தார்.

சுதந்திர கொண்டாட்ட பிரதான நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்பார்கள்.

பெப்ரவரி 3 ஆம் திகதி இரவு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பிரித் பாராயணம் இடம்பெறும். பிரதான வைபவத்துடன் இணைந்ததாக மாவட்ட மட்டத்திலும் சுதந்திர கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன என்றும் செயலாளர் கமல் பத்மசிறி கூறினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

Related posts

US and Japanese envoys called on President

Mohamed Dilsad

ජනවාරි මාසයේ දී වෙඩි තැබීමේ සිද්ධීන් 13ක්

Editor O

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்

Mohamed Dilsad

Leave a Comment