Trending News

நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்?

(UTV|INDIA)-இயக்குனர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட திரைப்படங்களில் சின்ன வேடங்களில் நடித்தவர் ரித்விகா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றதன் மூலம் பிரபலம் ஆனார். பிக்பாஸ் டைட்டிலை வென்ற ரித்விகாவிற்கு ட்விட்டரில் ஆர்மிகள் பல உள்ளன. தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த நிலையில் ரித்விகா தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என்கிற தகவலை ஒரு பட விழாவில் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் யாரோ ஒருவரை காதலித்து வருவதாகவும், இந்த வருடம் அவருக்கும் எனக்கும், திருமணம் நடக்கும் என்றும் சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் பரவி இருக்கிறது. நான் இந்த வருடம் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை.
என் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும். அதற்குள் நான் நடிக்க வேண்டிய படங்களை நடித்து முடித்து விடுவேன். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பேன். புதிய படங்கள் ஏதும் ஒப்பந்தமாகவில்லை. திருமணத்திற்கு பின் நடிப்பதா வேண்டாமா என்பதை என் கணவர் தான் முடிவு செய்வார்.” என்று கூறியிருக்கிறார்.
ரசிகர்களில் பலர் இவரின் முடிவை பாராட்டி வாழ்த்துக்கள் கூறி வந்தாலும். சிலர் இவர் நடிப்புக்கு முழுக்கு போடுவது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளனர்.

Related posts

நாடு முழுவதும் தொடரூந்து ஊடான பொதி பரிமாற்று சேவை பாதிப்பு

Mohamed Dilsad

රේගු නිලධාරීන්ට එල්ල කරන චෝදනා පදනම් විරහිතයි – රේගු වෘත්තිය සමිති සන්ධානය

Editor O

Akila Dananjaya reported for suspect bowling action against England

Mohamed Dilsad

Leave a Comment