Trending News

அஷ்ஷேக் யாகூப் அவர்களின் மறைவுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அனுதாபம்

(UTV|COLOMBO)-புத்தளம் கல்விமான் அஷ்ஷேக் யாகூப் அவர்களின் மறைவு தனக்கு ஆழ்ந்த கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பன்முக ஆளுமைகொண்ட அவரின் மனிதநேய செயற்பாடுகளை நான் பல சந்தர்ப்பங்களில் அறிந்திருக்கின்றேன்.

கற்றோருக்குரித்தான எளிமையும் சிறந்த பண்பும் கொண்ட அன்னார் வடபுல அகதி மக்களின் விடிவுக்காக உழைத்தவர். 1990ம் ஆண்டு புத்தளத்தில் தஞ்சம் அடைந்த வடபுல அகதிகளின் நலன்களுக்காக களத்தில் நின்று உதவி இருக்கின்றார். பல்லாயிரக்கணக்கன மக்கள் ஒரே இரவில் புத்தளத்தில் அடைக்களம் தேடியபோது அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கும் உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை எற்படுத்தி கொடுப்பதற்கும் சமூக ஆர்வளர்களுடன் இணைந்து அவர் பணியாற்றியவர். புத்தளத்தின் கல்வியலாளர்கள் வரிசையில் முன்னிலை வகித்த அன்னார் புத்தளத்தின் கல்வி வளர்ச்சிக்காக மேற்கொண்ட பணிகள் காலத்தால் அழிக்க
முடியாதவை.

அன்னாரின் இழப்பில் துயர்வுரும் குடும்பத்தரிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றேன்.

 

 

 

 

Related posts

China-built railway in southern Sri Lanka starts track-laying

Mohamed Dilsad

A Sri Lankan detained at BIA with foreign cigarettes

Mohamed Dilsad

சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 2 ஆம் திகதி

Mohamed Dilsad

Leave a Comment