Trending News

இந்தோனேசியாவில் நிலச்சரிவு -26 பேர் உயிரிழப்பு

(UTV|INDONESIA)-இந்தோனேசியா மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதியாகும். இதன் தெற்கு சுலவேசி மாகாணத்தில் நேற்று காலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் தென் சுலவேசியில் வீடுகள், பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த துயரச் சம்பவத்தில் சிக்கி 6 பேர் பலியானதாகவும், 10 பேர் காணாமல் போனதாகவும் முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2 குழந்தைகளும் அடங்குவார்கள்.
மேலும், காணாமல் போன 24 பேரை தேடி வருகின்றனர். சுமார் 3 ஆயிரத்து 321 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 46 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Related posts

காலநிலை

Mohamed Dilsad

ட்விட்டர் பதிவினால் வந்த வினை…

Mohamed Dilsad

அமெரிக்கா துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment