Trending News

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனயின் தலைமையில் கலாபூசணம் அரச விருது விழா இன்று

(UTV|COLOMBO)-நாட்டில் கலைத்துறையின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவைகளை ஆற்றிய கலைஞர்களைப் பாராட்டி கெளரவிக்கும் கலாபூசணம் அரச விருது விழா, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனயின் தலைமையில் இன்று(29) இடம்பெறவுள்ளது.

இன்று(29) பிற்பகல் 04.00 மணிக்கு கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெறவுள்ளது.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இந்த விருது விழா 34 ஆவது தடவையாகவும் இடம்பெறவுள்ளதுடன் அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் கலைஞர்கள் 200 பேர் இதன்போது விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர்.

இசை, நடனம், இலக்கியம், கட்புல கலைகள், நாடகம், புகைப்படக் கலை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் நாட்டார் கலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த சேவைகளை ஆற்றியவர்கள் இந்த விருது வழங்கி கெளரவிக்கப்படுகின்றனர்.

 

 

 

 

Related posts

காற்றின் வேகம் மணிக்கு 70 -80 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கும் வாய்ப்பு

Mohamed Dilsad

Railways to be made essential service again

Mohamed Dilsad

என்னை கண்டு எதிரணி பந்துவீச்சாளர்கள் அஞ்சுகின்றனர்

Mohamed Dilsad

Leave a Comment