Trending News

தேசிய தின விழாவில் மஹிந்த பங்​கேற்க மாட்டார்

(UTV|COLOMBO)-எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள தேசிய தின விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ பங்கேற்கமாட்டாரென, மஹிந்த தரப்பினர் அறிவித்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் அவருக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்‌ஷவின் பிரத்தியேக செயலாளர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் பிரத்தியேக செயலாளர் உதித் லொக்குபண்டரா இது தொடர்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு தேசிய தினத்தில் கலந்துக்கொள்வதற்காக அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அதில் கலந்துக்கொள்வதா, இல்லையா? என்பது குறித்து மஹிந்த ராஜபக்‌ஷ இன்னும் தீர்மானிக்கவில்லையென, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவின் ​பிரத்தியேக செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

Chinese Foreign Minister to visit North Korea

Mohamed Dilsad

Thirimanne stakes late WC claim with century

Mohamed Dilsad

England beat India for crucial win

Mohamed Dilsad

Leave a Comment