Trending News

திரையரங்குகளில் வாகனத் தரிப்பிடக் கட்டணம்

(UTV|INDIA)-திரையரங்குகளில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த எஸ்.நடராஜன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,

பெரும்பாலான வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளில் உரிய வாகனக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அதிகப்படியான கட்டணம் வசூலிக்கின்றனர். திரையரங்குகளில் உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் திரையரங்கிற்கு திரைப்படம் பார்க்க செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இது திரையரங்கு ஒழுங்குமுறை விதிகளுக்கு எதிரானது.  திரையரங்குகளில் உணவுப் பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதிப்பதில்லை. உள்ளே விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகமாக உள்ளது. குடிநீர் கூட எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை

என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திரையரங்குகளில் உள்ள வாகனத் தரிப்பிடக் கட்டணம் தொடர்பாக அரசு என்ன உத்தரவு பிறப்பித்துள்ளதோ, அந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

 

 

 

 

 

Related posts

உலக நாடுகளின் பார்வையை திருப்பிய யேமன் சிறுமி மரணமடைந்தார்

Mohamed Dilsad

Arjuna comments on uncertain future of Galle Cricket Stadium

Mohamed Dilsad

பப்புவா நியூ கினியாவில் பாரிய நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

Mohamed Dilsad

Leave a Comment