Trending News

விஜய் சேதுபதியை இறுக்கமாக கட்டித்தழுவிய திரிஷா

(UTV|INDIA) 100 நாள், 150 நாள் ஓடும் படங்கள் எல்லாம் எம்ஜிஆர், சிவாஜி காலத்தோடும், ரஜினி, கமலின் இடைக்காலத்திலும் அதிகம் காணப்பட்டது. கடந்த சில வருடங்களாகவே எந்த படமும் 100 நாள் ஓடுவதில்லை. படம் வெளியான 3 நாட்களுக்குள் வசூலை அள்ளவேண்டும் என்ற நோக்கில் 500 அல்லது ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் படங்கள் வெளியிடப்படுவதால் வசூல் அள்ளினாலும், குறைந்த நாட்களே படங்கள் தியேட்டரில் தாக்குபிடிக்கிறது.

இந்நிலையில் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த படம் 96 நீண்ட நாட்களுக்கு பிறகு 100 நாள் ஓடி வெற்றிகண்டிருக்கிறது. அதற்கான விழா சென்னையில் நடந்தது. இதில் பார்த்திபன் பேசும்போது, ‘விஜய்சேதுபதி அன்புக்கு பிரியமானவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார். சில படங்களுக்குதான் த்ரிஷா இல்லைனா நயன்தாரா. ஆனால் இந்த ‘96’ படத்திற்கு த்ரிஷா இல்லைனா த்ரிஷா மட்டும்தான்.

இப்படத்தில் விஜய்சேதுபதியும், த்ரிஷாவும் ஒரு முறையாவது கட்டிப் பிடிக்க மாட்டார்களா என்று எல்லோரும் ஆர்வமாக எதிர்பார்த்தார்கள். படத்தின் கடைசி வரை கட்டிப்பிடிக்கவே இல்லை. அது இங்கே நடக்க இருக்கிறது என்று கூறிய பார்த்திபன், விஜய்சேதுபதியையும், த்ரிஷாவையும் மேடைக்கு அழைத்து ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிக் கொள்ள சொல்ல, விஜய்சேதுபதியும் த்ரிஷாவும் இறுக்கமாக கட்டிப்பிடிக்க ரசிகர்கள் உற்சாக மிகுதியில் துள்ளினர்.

 

 

 

 

Related posts

India’s Foreign Secretary to arrive tomorrow

Mohamed Dilsad

ජනාධිපතිවරණයට අදාළ පැමිණිලි 631ක්

Editor O

සමගි ජනබලවේගය තීරණයක් ගනී.

Editor O

Leave a Comment