(UTV|COLOMBO) கடந்த வாரத்தில் மிரிச பகுதியில் திமிங்கலங்களை பார்வையிடுவதற்காக வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு கோடியே 50 லட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட தொகை வருமானமாக பெறப்பட்ட மிரிச வனஜீவராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் ஜோன் அமரதுங்க புதிய அனுமதி சீட்டை விநியோகிக்கும் நடவடிக்கையை சமீபத்தில் ஆரம்பித்துள்ளார்.
தெற்கு கரையோரப்பகுதியில் திமிங்கலங்களை பார்வையிடுவதில் வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வம் கொண்டுள்ளனர்.
மிரிச கரையோரப்பகுதிகளில் திமிங்கலங்களை பார்வையிடுவதற்காக வருகைதரும் சுற்றுலா பயணிகளுக்கு சேவைகளை வழங்குவதில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
சட்டரீதியிலான அனுமதிபத்திரம் மாத்திரமே வள்ளங்களில் சென்று திமிங்கலங்களை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.