Trending News

காற்றின் வேகம் அதிகரித்து வீசலாம்

(UTV|COLOMBO) நாட்டை சூழவுள்ள கரையோர பிராந்தியங்களில் காற்றின் வேகம் இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அதிகரித்து வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஊடாக காற்றின் வேகம் இடைக்கிடையில் மணிக்கு 50 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் விசேடமாக பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

காற்று வீசும் போது, கடற்றொழில் ஈடுபடுபவர்கள், கடல் பயணங்களை மேற்கொள்பவர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 

 

 

 

Related posts

மீண்டும் அமைச்சர் பதவியா?

Mohamed Dilsad

Ryan Reynolds To Attend A “Shotgun Wedding”

Mohamed Dilsad

Vote on Account in Parliament tomorrow

Mohamed Dilsad

Leave a Comment