உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த பெண் குழந்தையான (வேனலோப்) Vanellope Hope Wilkins 14 மாதங்களுக்கு பின்னர் ஆரோக்கியமாக வீடு திரும்பியுள்ளார்.
இங்கிலாந்தில் டீன் வில்கின்ஸ் –நவோமி naomi ஃபிண்ட்லே findlay தம்பதியருக்கு கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் திகதி பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இக்குழந்தை பிறக்கும்போதே மார்பு எலும்பு இல்லாமலும், இதயம் உடலுக்கு வெளியே இருந்து துடித்தபடியும் பிறந்துள்ளது.
வெளியே இருந்த இதயத்தை மீண்டும் அவளின் நெஞ்சுக்குள் பொறுத்த மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டது. இவ்வாறு 14 மாத தொடர் பராமரிப்புக்கு பிறகு குழந்தையின் உடல்நிலை தேறியதையடுத்து, குழந்தை வீடு திரும்பியுள்ளது. குழந்தை குணமடைந்ததால் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது மிகவும் அற்புதமான நாள்… குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்தது அளவுகடந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் குழந்தையின் தாயார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அதேபோல்…. அவள் ஒரு போராளி… அதை அவள் நிரூபித்துவிட்டாள்..அவள் தொடர்ந்து போராடுகிறாள் என அக்குழந்தையின் தந்தை கூறியிருக்கிறார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாலும், 24 மணி நேரப் பராமரிப்பு அக்குழந்தைக்குத் தேவைப்படுகிறது. குழந்தை சிரமம் இன்றி மூச்சுவிடுவதற்காக 24 மணி நேரம் சுவாசக் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என மருத்துவமனை கூறியுள்ளது.
அதன்படி சுவாசக் கருவி பொருத்தப்பட்டு குழந்தையின் சுவாசம் கண்காணிக்கப்படுகிறது. இதயம் வெளியில் இருந்தபடி பிறந்த குழந்தை, அறுவைச் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தது இதுவே முதல் முறையாக இருக்கும் என Glenfield கிளென்ஃபீல்ட் மருத்துவமனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.