Trending News

விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆறு பேரின் வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக கறுவாத்தோட்ட பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை பெப்ரவரி 25ம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று(11) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு ஐநா மனித உரிமை ஆணையாளர், இளவரசர் அல் ஹுசைன் இலங்கை வருவதற்கு எதிராக கொழும்பு 07, பௌத்தாலோக்க மாவத்தையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு, பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து விதி முறைகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்று அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

The Russos have finished editing “Endgame”

Mohamed Dilsad

Sri Lanka – Japan naval ships conduct joint sea-borne exercise

Mohamed Dilsad

சிரிய குண்டுத் தாக்குதலில் 39 பேர் பலி

Mohamed Dilsad

Leave a Comment