Trending News

பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பளம் – அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையே சந்திப்பு…

(UTV|COLOMBO) பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிற்கும்  தமிழ் முற்போக்கு கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே இன்று(12) மாலை சந்திப்பு ஒன்று  இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கின்றன..

பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பளம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் கடந்த மாதம் கைச்சாத்தானதை அடுத்து, அது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திடம் அதிருப்தியை வெளியிட்டிருந்த நிலையில், இது தொடர்பில் ஏற்கனவே முற்போக்கு கூட்டணி பிரதமரை சந்தித்து கலந்துரையாடியது.

அதன் அடிப்படையில் பிரதமரது ஆலோசகர் பாஸ்கரலிங்கம் தலைமையில், அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்று முதலாளிமார் சம்மேளனத்துடன் சந்திப்பை நடத்திய போதும், அதில் இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை.

இதன்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படக் கூடிய மாதாந்த நிவாரணம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

Related posts

மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் நவாஸ் ஷெரிப்

Mohamed Dilsad

JVP’s Handunnetti appointed COPE Chairman again

Mohamed Dilsad

Kaluganga Reservoir to be filled

Mohamed Dilsad

Leave a Comment