Trending News

கல்வியியல் கல்லூரிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பு

(UTV|COLOMBO) கல்வியியல் கல்லூரிகளுக்குப் பதிவுசெய்வதற்காக தபால் மூலம் விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இணையத்தளத்தினூடாக விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கலை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வியியல் கல்லூரிகளுக்கான ஆணையாளர் நாயகம் கே.எம்.எச். பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இணையத்தளத்தில் விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு மாத்திரமே இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில், எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும் எனக் கூறிய கல்வியியல் கல்லூரிகளுக்கான ஆணையாளர் நாயகம், 27 கற்கை நெறிகளுக்காக சுமார் 8,000 மாணவர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

Elections Commission to convene today

Mohamed Dilsad

Saudi Arabia gifts 150 tons of dates to Sri Lanka

Mohamed Dilsad

ஏஞ்சலோ மேத்யூஸ் தாயகம் திரும்பினார்

Mohamed Dilsad

Leave a Comment