Trending News

வேனில் கஞ்சா போதைப்பொருளை கொண்டு சென்ற இருவர் கைது

வேனில் கஞ்சா போதைப்பொருளை கொண்டு சென்ற இரண்டு பேர் நொச்சியாகம – ஹில்மில்லகுளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

நொச்சியாகம காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்றைய தினம் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்கள் 30 மற்றும் 40 வயதான வெயாங்கொடை பகுதியை சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர்களிடமிருந்து சுமார் 5 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் அவர்கள் தம்புத்தேகம நீதிமன்றில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளனர்.

 

 

 

Related posts

NBRO issues landslide warning

Mohamed Dilsad

புது வருடத்தை மிக கோலாகலமாக வரவேற்ற உலக வாழ் மக்கள்

Mohamed Dilsad

இஷா குப்தாவுக்கும் கிரிக்கெட் வீரருக்கும் திருமணம்?

Mohamed Dilsad

Leave a Comment