Trending News

கிங்சி வீதி-கேரி கல்லூரி சுற்றுவட்டம் வரை ஒருவழிப் போக்குவரத்து?

(UTV|COLOMBO) கிங்சி வீதி சுற்றுவட்டத்தில் இருந்து கேரி கல்லூரி சுற்றுவட்டம் வரையிலான பகுதியில் ஒருவழிப் போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று முதல் வாரநாட்களில் ஹோட்டர்ன் பிரதேசம், கிங்சி வீதி சுற்றுவட்டத்தில் இருந்து கேரி கல்லூரி சுற்றுவட்டம் வரையிலான பகுதியில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ஒருவழிப் போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்படவுள்ளது.

ஆயுர்வேத சுற்றுவட்டத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கிங்ஸி சுற்றுவட்டத்தில் இருந்து கேரி கல்லூரி சுற்றுவட்டம் வரை பயணிக்கும் வாகனங்கள் மருதானை, பொரளை வீதிகளின் இரு மருங்கிலும் அல்லது கிங்சி பகுதியினூடாக வோர்ட் பிளேஸின் இரு மருங்கிலும் பயணிக்க முடியும் என பொலிஸார் வாகன சாரதிகளை அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

 

 

Related posts

குருநாகல் பள்ளிவாசல் மீதான தாக்குதல்! சந்தேக நபர்கள் சிக்கினார்கள்..

Mohamed Dilsad

உலக மது ஒழிப்பு தினம் இன்று

Mohamed Dilsad

Ranil, Sajith to meet tomorrow to finalise Presidential candidacy

Mohamed Dilsad

Leave a Comment