Trending News

பாராளுமன்றம் இன்று (20) 1 மணியளவில் கூடுகிறது

(UTV|COLOMBO) சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் இன்று (20) 1 மணியளவில் கூடவுள்ளது.

பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னர் நண்பகல் 12 மணியளவில் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ஏற்றுமதி கட்டளைச் சட்டத்தின் இரண்டு கோவைவிதிகள் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

இதேவேளை, இன்று பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்றும் சபாநாயகர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதன்போது, மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

Talks fail, train strike launched

Mohamed Dilsad

சில இடங்களில் மழையுடன் கூடிய காலநிலை

Mohamed Dilsad

ආගමන – විගමන දෙපාර්තමේන්තුව පැය 24ම විවෘතව තැබීමේ සූදානමක්

Editor O

Leave a Comment