Trending News

அதிசிறந்த விளையாட்டு வீரருக்கான லொரியஸ் விருதை சுவீகரித்தார் நோவக் ஜோகோவிச்

உலகின் முதற்தர டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் (Novak Djokovic) ஆண்டின் அதிசிறந்த விளையாட்டு வீரருக்கான லொரியஸ் (Laureus) விருதை சுவீகரித்தார்.

விளையாட்டுத்துறையில் திறமையை வெளிப்படுத்திய வீர, வீராங்கனைகளில் அதிசிறந்தவர்களைத் தெரிவு செய்து கௌரவிக்கும் லொரியஸ் வருடாந்த விருது வழங்கல் விழா மொனாக்கோவில் நடைபெற்றது.

ஆண்டின் அதிசிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தட்டிச்சென்றார்.

அவர் கடந்த வருடம் விம்பிள்டன், அமெரிக்க பகிரங்கம் மற்றும் இவ்வருடம் அவுஸ்திரேலிய பகிரங்கம் ஆகிய கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டங்களை வெற்றிகொண்டார்.

 

 

 

 

Related posts

தம்புள்ளை பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு

Mohamed Dilsad

PHIs to launch all-island token strike today

Mohamed Dilsad

விரதம் அனுஷ்ட்டிப்பதன் ஊடாக கிடைக்கும் முக்கிய நன்மைகள் தொடர்பில் ஆய்வில் தகவல்

Mohamed Dilsad

Leave a Comment