Trending News

தாய்லாந்தின் புதிய அரசருக்கு அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு

(UTV|COLOMBO) தாய்லாந்தின் 10 ஆவது அரசராக மே மாதத்தில் முடி சூடவுள்ள மகா வஜீரலங்கோன் இளவரசருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், புனித ஜய ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி சார்பில் அரச மரக்கன்றை தாய்லாந்துக்கு கொண்டு சென்ற புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, தாய்லாந்து இளவரசருக்கு ஜனாதிபதி அவர்களின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், அரச மரக்கன்று ஒன்றையும் நேற்று(19) கையளித்தார்.

தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுவூட்டும் வகையிலும் தேரவாத புத்த தர்மத்தை பாதுகாப்பதற்கும் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையாக இந்நிகழ்வு கருதப்பட்டதுடன், முடி இளவரசருக்கு இராஜதந்திர ரீதியில் கிடைத்த முதல் பரிசு இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

Edappadi Palanisamy sworn as a chief minister of Tamil Nadu

Mohamed Dilsad

தாய்லாந்தில் மற்றொரு சோகம் சம்பவம்

Mohamed Dilsad

Nissanka Senadhipathi arrested

Mohamed Dilsad

Leave a Comment