Trending News

தனியார் வகுப்புகளுக்குத் தடை?

(UTV|COLOMBO) ஞாயிற்றுக்கிழமை மற்றும் பூரணை தினங்களில், தனியார் வகுப்புகள் நடாத்துவதற்குத் தடை விதிப்பதற்கான யோசனைக்கு, சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளவுள்ளதாக, புத்தசாசன மற்றும் வட மேல் அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

குறித்த யோசனைத் திட்டத்திற்கு, அமைச்சர் மனோ கணேசன், கத்தோலிக்க மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஜோன் அமரதுங்க, இஸ்லாம் மார்க்க மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஏ.எச்.எம். ஹலீம் மற்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் தௌிவுபடுத்தியுள்ளதாக, அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த இறுதித் தீர்மானம் எட்டப்பட்டவுடன், மீண்டும் அமைச்சரவையில் பத்திரத்தை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

 

 

 

Related posts

Youth arrested with Kerala Cannabis

Mohamed Dilsad

Due process followed – SL to Swiss

Mohamed Dilsad

Captain Iyer destroys KKR

Mohamed Dilsad

Leave a Comment