Trending News

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில் கண்டியில் இளைஞர் யுவதிகளுக்கான முழு நாள் செயலமர்வு

(UTV|COLOMBO) கைத்தொழில்,வர்த்தகம்,நீண்ட காலம் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட Coop- yes அமைப்பு இலங்கையிலுள்ள இளைஞர் யுவதிகளை ஒன்று சேர்த்து அவர்களின் திறமைகளை இனங்கண்டு,  சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பல திட்டங்களை மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கிணங்க கடந்தவருடம் குருநாகலையில் முதற்தடவையாக இடம்பெற்ற செயலமர்வைப்போல்,  இவ்வருடமும் கண்டி பொல்கொல்லையில் இரண்டாவது செயலமர்வை இன்று (24) நடாத்தி வருகின்றது.

சுமார் 500 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளின் பங்களிப்புடன் நடாத்தப்படும் இந்த முழு நாள் செயலமர்வு இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ரியாஸ் தலைமையில் ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் கூட்டுறவு ஆணையாளர் நஸீர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரதிநிதியாக இணைப்புச்செயலாளர் இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நஸீர், கலாநிதி அஸீஸ், நுகர்வோர் அதிகார சபைப்பணிப்பாளர் பௌசர்,கண்டி மாவட்ட கூட்டுறவு சம்மேளனத்தலைவர் தென்னக்கோன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளர் அம்ஜாத் ஹாஜியார், கண்டி மாவட்ட இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன்,  டொக்டர் தசநாயக்க,  ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்..

 

-ஊடகப்பிரிவு

Related posts

கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி பெயர் பரிந்துரை

Mohamed Dilsad

Qatar, Sri Lanka hold talks on matters of mutual interest

Mohamed Dilsad

பதில் சட்டமா அதிபராக தப்புல

Mohamed Dilsad

Leave a Comment