Trending News

கொழும்பு துறைமுகத்தை ஸ்மார்ட் துறைமுகமாக மாற்றியமைக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) எதிர்வரும் 12-18 மாதங்களுள் கொழும்பு துறைமுகத்தை ஸ்மார்ட் துறைமுகமாக மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துற‍ைமுகங்கள், கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பு துறைமுகத்தின் பிரதான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியால் இத்திட்டத்தின் பொருட்டு ரூபாய் 929 மில்லியன்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிலமைக்கேற்ப செயற்படுதல் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்திச் செய்வதன் மூலமாக இதுவோர் ஸ்மார்ட் துறைமுகமாக மாற்றமடையும் எனவும், தொழில்நுட்ப அபிவிருத்தி எனும் அடிப்படை திட்டத்தை மேம்படுத்துவதன் மூலமாக இந்நீண்டகால அபிவிருத்திச் செயற்பாட்டினை முன்னோக்கி கொண்டுச் செல்ல இயலும் என தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

P. B. Jayasundara appointed President’s Secretary

Mohamed Dilsad

ஜப்பான் நாட்டின் பாதுகாப்பு பணிக்குழாம் தலைவர் – ஜனாதிபதி சந்திப்பு

Mohamed Dilsad

அவுஸ்ரேலிய ஆளுநர் இல்லத்தில் ஜனாதிபதிக்கு உயரிய வரவேற்பு

Mohamed Dilsad

Leave a Comment