Trending News

அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் கொக்கேய்ன் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

(UTV|COLOMBO) பாராளுமன்ற உறுப்பினர்கள் கொக்கேய்ன் பாவிப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்த கருத்து தொடர்பில் விசாரணைக்குழுவின் அறிக்கை நேற்று(25) பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

குறித்த கருத்து தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டத்தின் போது குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் கடந்த வௌ்ளிக்கிழமை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறித்த குழுவின் முன்னிலையில் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இது தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த அறிக்கையின் பிரதி ஒன்றினை குற்றத்தடுப்பு பிரிவினருக்கும் வழங்கவுள்ளதாக அவைத்தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

பாராளுமன்ற வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

Mohamed Dilsad

Galle District – Galle

Mohamed Dilsad

Couple hit by train while taking selfie in Kahawa

Mohamed Dilsad

Leave a Comment