Trending News

வடமாகாண மருந்தகங்களில் மருந்தகர்கள் கட்டாயம் கடமைபுரிய வேண்டும்

(UTV|COLOMBO) யாழ்ப்பாணத்திலுள்ள மருந்தகங்களின் நிலைமையினை நேரில் ஆராயும் பொருட்டு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் யாழ் நகரிலுள்ள சில மருந்தகங்களிற்கு நேற்று முன்தினம் (25) இரவு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது மருந்தக உரிமையாளர்களுடன் சினேகபூர்வமாக கலந்துரையாடிய ஆளுநர் அவர்கள் கடையடைப்பு நாளானாலும் மக்களின் அத்தியாவசிய தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கில் மருந்தகங்கள் திறந்திருந்தமையை பாராட்டினார்.

அத்தோடு வடமாகாணத்தில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும் மருந்தகங்களின் உரிமம் கட்டாயம் காட்சிப்படுத்தப்பட வேண்டியதுடன் மருந்தாளர்கள் (Pharmacist) கட்டாயம் கடமையில் இருக்கவேண்டும் என்றும் ஆளுநர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

 

 

 

Related posts

இளம் ஜோடி செய்த காரியம்-காவற்துறையினரால் கைது

Mohamed Dilsad

Man found shot dead inside Kataragama holiday resort

Mohamed Dilsad

Cannabis bound for Sri Lanka seized in India

Mohamed Dilsad

Leave a Comment