Trending News

இன்று இடம்பெறவுள்ள இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை

(UTV|VIETNAM) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் ஆகியோருக்கு இடையிலான இரண்டாவது உச்சிமாநாடு இன்று (27) ஆரம்பமாகவுள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையிலான முதலாவது சந்திப்பு சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது சந்திப்பாக இது வியட்நாமில் இடம்பெறவுள்ளது.

இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தை இன்றும் நாளையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, கொரிய தீபகற்பத்திலிருந்து அணுவாயுதங்களை இல்லாதொழிப்பது தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடுவர் என எதிர்பார்க்கப்படுவதாக, சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இரண்டாவது உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியட்நாமைச் சென்றடைந்துள்ளார்.

இதேவேளை, வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் ரயிலில் பயணம் செய்து, வியட்நாமை அடைந்து அங்கிருந்து பின்னர் காரில் சென்றதாக சர்வசே ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

 

 

 

Related posts

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் மகனும் பலி

Mohamed Dilsad

பொது மன்னிப்பு வழங்கிய ஐசிசி

Mohamed Dilsad

20 வருடங்களின் பின் தாய்நாட்டுக்காக சேவையாற்றுவதில் சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி

Mohamed Dilsad

Leave a Comment