Trending News

மழையுடன் கூடிய காலநிலை

(UTV|COLOMBO) நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு மாகாணம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும் எனவும்,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களுடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

 

 

 

 

Related posts

விரைவில் அமைச்சரவையில் சீர்த்திருத்தம்

Mohamed Dilsad

Mathews to miss first game due to injury

Mohamed Dilsad

டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு

Mohamed Dilsad

Leave a Comment