Trending News

உணவில் மனித பல்?- 75 அமெரிக்க டொலர் இலவச கூப்பன்

(UTV|SINGAPORE) விமானத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும்  உணவில் மனித பல்  இருந்ததால் பயணி அதிர்ச்சியடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில் இருந்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு புறப்பட்டு சென்றது. குறித்த விமானத்தில் பிராட்லி பெத்தான் என்பவர் பயணம் செய்தார்.

குறித்த விமானத்தில் அவருக்கு உணவு வழங்கப்பட்டது. அவர் உணவு உட்கொண்ட போது, கல்போன்று ஏதோ பொருள் வாயில் கடிப்பட்டது. அதனை எடுத்து பார்த்தபோது, அது மனித பல் என தெரியவந்தது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பிராட்லி பெத்தான், விமான ஊழியர்களிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து, தங்களது தவறை ஒப்புக்கொண்ட விமான நிறுவனம் அதற்காக பிராட்லி பெத்தானிடம் மன்னிப்பு கோரியது. மேலும் அவருக்கு இழப்பீடாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் 75 அமெரிக்க டொலர் மதிப்பிலான இலவச கூப்பனை வழங்கியது.

 

 

 

 

 

 

 

 

Related posts

Fishing and naval community warned

Mohamed Dilsad

CTB bus topples in Nawalapitiya, 57 injured

Mohamed Dilsad

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தியில் அதிகரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment