Trending News

பதுளை மர்ம மனிதர்கள் மக்கள் அச்சத்தில்…

(UTV|COLOMBO) ஊவா மாகாணம் பதுளை மாவட்டம் ஹாலிஎல பிரதேசத்திற்கு உட்பட்ட தோட்டங்களில் மர்ம மனிதர்கள்  உலாவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இரவு வேலைகளிலும் பகல் வேலைகளிலும் இவர்கள் மக்களை பயமுருத்தி வரும் அதேவேலை சில கொள்ளை சம்வங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம்  23 ஆம் திகதி முதல் ஆரம்பித்த இந்த சம்வவம் தற்போது அதிகரித்து வருகின்றது. இரவு வேலைகளில் தோட்ட இளைஞர்கள் நித்திரை இன்றி காவல் காத்து வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் ஹாலிஎல பொலிஸ் நிலையத்தில் முறைபாடும் செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் தோட்டத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த வேலையில் பயத்திற்கு உள்ளாகி ஓடியதில் வீழ்ந்து காயம் அடைந்ததில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதனால் இந்த மக்கள் அச்சத்தில் இருகின்றனர்.
மேற்படி பிரச்சனைக்கு யாரும் முடிவு காணாததினால் தோட்ட மக்கள் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் அவர்களிடம் முறையிட்டனர். இராஜாங்க அமைச்சர் உடனயாக பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டார். அதன் விளைவாக ஸ்தலத்திற்கு பொலிஸார்  விரைந்து விசாரனைகளை மேற்க்கொண்டு வருகின்றனர். இரவு வேலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்க ஆயத்தங்கள் முன்னெடுக்கபட்டு வருகின்றனர். இந் நிலையில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு நிலமையை கேட்டு அறிந்து கொண்டார்.
முன்னைய காலங்களில் “கீரீஸ்பேய்”; என்று மர்ம மனிதர்கள் காணப்பட்டமையினால் நாட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட்டமை யாரும் அறிந்த விடயம். இவ்வாறான நிலையில் மீண்டும் மர்ம மனிதர்களின் நடமாட்டம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ள அதே நேரம் பாதுகாப்பு பிரிவினர் ஊடாக தீர்வு பெற்றுதறுமாறு கோரிக்கை விடுக்கின்றனர் .
பா.திருஞானம்

Related posts

விரைவில் பெண்களுக்கான பிரத்தியேக பஸ்…

Mohamed Dilsad

வெளிநாட்டுப் பிரஜைகள் நால்வர் கைது

Mohamed Dilsad

இரு முக்கிய பிடியெடுப்புக்களை தவறவிட்ட இலங்கை வீரர்களால் மாறிய போட்டி:கலங்கிய மாலிங்க

Mohamed Dilsad

Leave a Comment