Trending News

ட்விட்டர் பதிவினால் வந்த வினை…

பொலிவூட் நடிகை பிரியங்கா சொப்ராவை யுனிசெப் நல்லெண்ணத் தூதுவர் பதவியிலிருந்து விலகுமாறு பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.இந்திய தாக்குதலை அவர் நியாயப்படுத்தியது இதற்கான காரணமாகும்.

விமானப்படை தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்த பொலிவுட் நடிகை பிரியங்கா சொப்ராவை யுனிசெஃப் நல்லெண்ணத் தூதர் பதவியிலிருந்து விலகும் படி பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் யுனிசெஃப்பின் நல்லெண்ணத் தூதராக நடிகை பிரியங்கா சொப்ரா செயற்பட்டு வருகின்றார்.

புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை வீரர்கள் கொடுத்த பதிலடிக்கு தனது ட்விட்டரில் ஜெய் ஹிந்த் என்று பதிவிட்டிருந்ததுடன் இந்தியன் ஆர்ம்ட் போர்ஸ் என ஹேஷ் டெங்கையும் இணைத்திருந்தார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான தாக்குதலின் போது நடுநிலையாக செயற்படாமல் ஒருதலைபட்சமாக அவர் நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது என பிரியங்கா சொப்ராவுக்கு எதிராக இணையதளத்தில் கையெழுத்து சேகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை பாகிஸ்தான் ஆரம்பித்துள்ளது.

அத்துடன் அவர் பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக பிரியங்கா மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிரபலங்கள் சினிமா நட்சத்திரங்கள் உட்பட பலரும் விமானப்படை தாக்குதலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர்.

 

 

 

 

Related posts

Rs. 9,000 million allocated to provide relief to drought-affected

Mohamed Dilsad

குழந்தைகளை கொல்ல இணையத்தில் வழி தேடிய தாய்…

Mohamed Dilsad

மீன்வளர்ப்பு ஆராய்ச்சி மையம் திறப்பு

Mohamed Dilsad

Leave a Comment