Trending News

காணாமல் போன MH370 மலேசிய விமானத்தின் மர்மம்-5 வருட நினைவு கூறல்

(UTV|MALAYSIA) சாத்தியமான திட்டங்களுடன் விமானத்தை தேடுவதில் ஆர்வமுள்ள நிறுவனங்கள் இருந்தால் காணாமல் போன MH370 மலேசிய விமானத்தை தேடும் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என மலேசிய போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

காணாமல் போன MH370 மலேசிய விமானத்தின் 5 ஆம் வருட நினைவு தின நிகழ்வு நேற்று(03) மலேசியாவில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட போக்குவரத்து அமைச்சர் அன்டனி லொக் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கி பயணித்த MH370 மலேசிய விமானம் காணாமல் போயிருந்தது.

மர்மமாகியிருந்த விமானத்தின் பாகங்கள் கிடைக்கப்பெறாத நிலையில் அவுஸ்ரேலியா, மலேசியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கடலுக்கடியில் தேடும் பணியில் ஈடுபட்டன.

சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடுதல் வேட்டை நடைபெற்றும் விமான பாகங்களை கண்டுபிடிக்க முடியாததையடுத்து தேடுதல் பணிகள் நிறுத்தப்படுவதாக 2017 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்களின் அழுத்தத்தின் பேரில் ஓஷன் இன்ஃபினிட்டி ((Ocean Infinity)) என்ற நிறுவனத்தை மலேசிய அரசு தேடு பணியில் அமர்த்தியது. அந்த நிறுவனத்தால் மீண்டும் 25,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடுதல் நடைபெற்ற நிலையில் தேடுதல் பணி தோல்வியடைந்துவிட்டதாக குறித்த நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையிலேயே மீண்டும் விமானத்தை தேடுவதற்கான ஆர்வத்தை மலேசிய போக்குவரத்து அமைச்சு நேற்று(03) வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related posts

JVP organised a protest in Maharagama today

Mohamed Dilsad

Arie Irawan: Malaysian golfer dies aged 28 in China

Mohamed Dilsad

அர்ஜூன ரணதுங்கவிற்கு விடுதலை

Mohamed Dilsad

Leave a Comment