Trending News

சதம் அடித்து சச்சின் பட்டியலில் இணைந்த கோஹ்லி…

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே நேற்று இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 250 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக அணித் தலைவர் விராட் கோஹ்லி 116 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று கொடுத்தார்.

இதன்மூலம் ஒரு நாள் போட்டிகளில் விராட் கோஹ்லி தனது 40வது சதத்தை பூர்த்தி செய்து, 40 சதங்கள் பூர்த்தி செய்தவர்கள் பட்டியலில் சச்சின் தெண்டுல்கருடன் இணைந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 242 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவு செய்யப்பட்டார்.

 

 

 

 

Related posts

தொழிலற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பு

Mohamed Dilsad

உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் இதோ…

Mohamed Dilsad

இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 35வது வருடாந்த மாநாடு ஜனாதிபதி தலைமையில்

Mohamed Dilsad

Leave a Comment