Trending News

சமுர்த்தி ஆரோக்கிய உணவகங்கள்…

(UTV|COLOMBO) ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக ஊக்குவிப்பு அமைச்சின் புதிய நடவடிக்கையாக நாடு முழுவதிலும் உள்ள சமுர்த்தி சமூக நிதி வங்கி சங்கங்கள் வளவில் நவீன வசதிகளைக்கொண்ட ஆரோக்கியமான உணவகங்களை ஆரம்பிப்பதற்கு  மேற்கொண்டுள்ளது.

அமைச்சர் தயா கமகேயின் ஆலோசனைக்கமைய அமைக்னகப்பட்டுள்ள முதலாவது ஆரோக்கிய உணவகம் காலி பத்தேகம சமுர்த்தி சமூக நிதி சங்க வளவில் நாளை காலை 10 மணிக்கு அமைச்சர் தலைமையில் திறந்துவைக்கப்படவுள்ளது.
இந்த உணவகத்துக்காக 25 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

சமுர்த்தி பெண்களை ஊக்குவிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் தொழில் அபிவிருத்தி வேலைத்திட்டத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.. ஆரோக்கியமான உணவகத்தின் மூலம் நச்சுதம்மை அற்ற இயற்கை உரத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட அறுவடைகள் மூலம் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உணவு பொருட்களை தயாரிப்பது தொடர்ப்பில் சமுர்த்தி பயணாளிகளான பெண்களை பயிற்றுவித்து ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

Inland Revenue Act aims to raise direct taxes to 40% – FM

Mohamed Dilsad

Z-Score system to be changed

Mohamed Dilsad

රථවාහන වේගය මනින්න පොලීසියට ස්පීඩ් ගන්

Editor O

Leave a Comment