Trending News

இலங்கை தொடர்பான அறிக்கை, இன்று வெளியிடப்படும் சாத்தியம்…

(UTV|COLOMBO)இன்று(08)  ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை, பகிரங்கப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 34/1 தீர்மானத்தின் அடிப்படையில், குறித்த தீர்மானத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்த அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பேரவையின் இந்தக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க வேண்டும்.

எதிர்வரும் 20ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அதிகாரபூர்வமாக சமர்ப்பிக்கப்படவுள்ள குறித்த அறிக்கை நேற்று(07) இலங்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இன்று(08) இந்த அறிக்கை பகிரங்கமாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

Related posts

Sri Lanka SMEs receive global funding support

Mohamed Dilsad

Tobacco and liquor seized at customs

Mohamed Dilsad

හිරුනිකා ප්‍රේමචන්ද්‍ර ට අවුරුදු 03ක බරපතල වැඩ සහිත සිර දඬුවමක්

Editor O

Leave a Comment