Trending News

பொரளை போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி உயிரிழப்பு…

(UTV|COLOMBO) கொழும்பு – பம்பலப்பிட்டியில் டிபென்டர் ரக வாகனத்தில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆனந்த சாகர சரத்சந்திர சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 24 ஆம் திகதி பம்பலப்பிட்டி டுப்ளி புலர்ஸ் சந்தியில் பயணித்த பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியின் மோட்டார்சைக்கிளை மோதிவிட்டு டிப்பென்டர்  வாகனத்தில் பயணித்தவர்கள் தப்பிச் சென்றனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகேவின் புதல்வர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிபெண்டர் வாகனத்தை செலுத்திய உதேஷ் ரத்னாயக்க எனும் நபர்,  விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பதவியை ராஜினாமா செய்தார் பர்வேஸ் முஷாரப்

Mohamed Dilsad

6.4 Magnitude Earthquake Rocks North Mariana Islands’ Anatahan

Mohamed Dilsad

15 hour water cut in several areas

Mohamed Dilsad

Leave a Comment