(UTV|COLOMBO) மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான கலந்துரையாடல் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது.
பத்தரமுல்லையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.
20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கலந்துரையாட தமிழ் தேசியக் கூட்டமைப்பினை இன்று(11) சந்திக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
குறித்த கட்சியின் பிரச்சார செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவிக்கையில், இது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று(11) பிற்பகல் 02.00 மணிக்கு கட்சித் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
குறித்த கலந்துரையாடல்களின் முதற்கட்ட நடவடிக்கையாய் மக்கள் விடுதலை முன்னணி கடந்த 06ம் திகதி எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.