Trending News

ஐக்கிய இராச்சியத்தினால் இலங்கை வெடிகுண்டு அகற்றும் படையணிக்கு உயர்ரக நாயொன்று வழங்கல்

(UTV|COLOMBO) இராணுவத் தளபதியான லெப்டினனட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில்; முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளின் ஓர் பங்காக காணப்படும் வெடிகுண்டு அகற்றும் திட்டத்திற்கமைவாக ஐக்கிய இராச்சியத்தின் மார்ஷல் மரபுரிமை அமைப்பினால் பெல்ஜியம் மாலினோஸ் எனப்படும் இனத்தைச் சேர்ந்த நம் எனும் பெயரையுடைய 4 வயதுடைய நாயொன்று பொறியியலாளர் படையணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ‘நம்’ பொஸ்னியாவில் 2015ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதியன்று பிறந்துள்ளதுடன் இது வடக்கு ஈராக்கின் வெடிகுண்டு அகற்றும் படையணியில் சேவையாற்றியதுடன் இதன் பயிற்றுவிப்பாளரான திரு ஏடிஸ் பெல்டோ அவர்களால் இலங்கை இராணுவத்தின் 08 மோப்பநாய்களைக் கொண்ட வெடிகுண்டு அற்றும் படையணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இராணுவத் தளபதி மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் மார்ஷல் மரபுரிமை அமைப்பு போன்றவற்றின் நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை நோக்காகக் கொண்டு பூ ஓயவில் உள்ள பொறியியலாளர் படையணித் தலைமயகத்தில் காணப்படும் நாய் பயிற்றுவிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் ‘நம்’ எனும் நாயானது பூ ஓயவில் உள்ள பொறியியலாளர் படையணித் தலைமயகத்தின் தளபதியான பிரிகேடியர் ஏ என் அமரசேகர அவர்களின் தலைமையில் இந் நாயானது பெற்றுக் கொள்ளப்பட்டதோடு இதன் விபரக் கோவையும் இவ் அதிகாரியவர்களுக்கு வழங்கப்பட்டது.

அந்த வகையில் நாடளாவிய ரீதியில் வெடிகுண்டுகள் அகற்றும் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றது. மேலும் 25.61ஏக்கர் பரப்பிலான இடமானது இராணுவத்தின் வெடிகுண்டு அகற்றும் பொறியியலாளர் படையினரால் மேற்கொள்ளப்படவுள்ளது.

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2019/03/NAM-DOG-03.jpg”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2019/03/NAM-DOG-01.jpg”]

 

 

 

 

 

Related posts

அந்தமான் தீவு பகுதிகளில் நிலநடுக்கம்…

Mohamed Dilsad

Japan’s Kei Saito given first doping ban in Pyeongchang

Mohamed Dilsad

Over 1,100 dengue cases this year

Mohamed Dilsad

Leave a Comment