Trending News

ஜோதிகாவின் அடுத்த படம் ராட்சசி…

(UTV|INDIA) `காற்றின் மொழி’ படத்துக்குப் பிறகு ஜோதிகாவைத் தேடி நிறைய கதைகள் வருகிறது. முக்கியமாக பெண்ணியம் சார்ந்த கதைகள் தான் அதிகமாக வருவதாக கூறப்படுகிறது. மக்கள் எளிதில் தங்களை இணைத்துக்கொள்ளும் கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்.
அந்த வகையில், அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். ஜோதிகா ஆசிரியை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு `ராட்சசி’ என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ஜோதிகாவுக்கு ஆக்‌‌ஷன் காட்சிகள் கூட இருக்கிறது.
இதில் முக்கிய வேடத்தில் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி ஆகியோர் நடிக்கிறார்கள். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இந்த படத்தை தயாரிக்கிறார்.
தற்போது கல்யாண் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் ஜோதிகா, அடுத்ததாக ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related posts

බැඳුම්කරය ගැන විවාදයට අමතර දින දෙකක්

Mohamed Dilsad

38 வயதில் திருமணத்துக்கு தயாராகும் கவுசல்யா

Mohamed Dilsad

SL Women qualify for 2017 World Cup

Mohamed Dilsad

Leave a Comment