(UTV|COLOMBO) உலகளாவிய ரீதியில் பேஸ்புக் (Facebook) சமூக வலைத்தளமானது அதன் வரலாற்றில் மிகவும் கடுமையான செயலிழப்புக்கு உள்ளாகியுள்ளது.
இதனையடுத்து, பேஸ்புக்கின் பிரதான செயலிகளான வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டகிராம் ஆகியனவும் செயலிழந்துள்ளன.
இதற்கு முன்னர் இதேபோன்று 2008ஆம் ஆண்டு பேஸ்புக்கில் இவ்வாறான தடங்கல் ஏற்பட்டிருந்தது.
அதன்போது பேஸ்புக் பாவனையாளர்களாக இருந்த 150 மில்லியன் கணக்கானோருடன் ஒப்பிடுகையில், தற்போது பேஸ்புக் பாவனையாளர்கள் ஒருநாளைக்கு 2.3 பில்லியனாக உள்ளனர்.
இந்த இடையூறிற்கான காரணம் இதுவரையில் வௌியிடப்படவில்லை.
இந்தநிலையில், பேஸ்புக்கின் செயலிழப்பை இயன்றவரையில் விரைவாக சீர்படுத்துவதற்கான செயறாபாட்டில் ஈடுபட்டுள்ளதாக, பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.