Trending News

ஆரம்ப பாடசாலை கட்டடம் சரிந்து வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு

(UTV|NIGERIA) நைஜீரியாவின் லாகோஸ் நகரில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் உள்ள கட்டடம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த கட்டட இடிபாடுகளுக்கு பெருமளவான சிறுவர்கள் சிக்கியிருக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

லாகோஸில் உள்ள பாடசாலை ஒன்றில் மூன்று தளங்களைக் கொண்ட கட்டடம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் இந்த அனர்ந்தம் ஏற்பட்டுள்ளது.

நைஜீரிய நேரப்படி நேற்றுக் காலை 10.00 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 

 

Related posts

கஞ்சிபான இம்ரானுக்கு நெருக்கமான மூவர் கைது

Mohamed Dilsad

ஏ.எச்.எம்.பௌசியை கட்சியில் இருந்து விலக்க தீர்மானம்

Mohamed Dilsad

Scott Morrison sworn in as Prime Minister [UPDATE]

Mohamed Dilsad

Leave a Comment