Trending News

வரட்சியுடனான காலநிலை – பல மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிப்பு

(UTV|COLOMBO) நாட்டில் நிலவும் வரட்சியுடனான காலநிலை காரணமாக ஆறுகளின் நீர் மட்டம் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளது.

பல மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மஹாவெலி கங்கையின் நீர் மட்டம் 42 வீதமாக குறைவடைந்துள்ளதுடன், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் 40 அடி வரை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவளை வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல மாவட்டங்களிலும் இந்த நிலைமை நீடிக்கும் பட்சத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவும் என இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பட்சத்தில், குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

Sajith assures high-quality life [ELECTION MANIFESTO]

Mohamed Dilsad

Gotabhaya returns from Singapore

Mohamed Dilsad

TID summons Sivajalingam

Mohamed Dilsad

Leave a Comment