Trending News

10 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது

(UTV|COLOMBO)  10 கிலோ கேரளா கஞ்சாவுடன் யாழ். செம்மணி பகுதியில் மூவர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், உடுத்துறைப் பகுதியைச் சேர்ந்த மூவரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (17) இரவு 3 பேரும் 10 கிலோ கேரளா கஞ்சாவை கைமாற்றவதற்கு வருகை தந்திருந்த போதே, யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட மூவரிடமும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன்,மூவரையும்  யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையும் முன்னெடுத்து உள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

 

 

Related posts

நீரில் மூழ்கிய நாவலபிட்டி நகர்

Mohamed Dilsad

අද ඩොලරය

Editor O

Journalist arrested in Bangladesh for ‘false’ reporting on voting irregularities

Mohamed Dilsad

Leave a Comment